உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

வாலிபருடன் வெளியூரில் தங்கி இருந்த குமரி மாணவியை மீட்ட போலீசார்

Published On 2022-12-06 13:22 IST   |   Update On 2022-12-06 13:22:00 IST
  • சமூக வலை தளம் மூலம் பழகி மாயமானார்
  • வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9- ம் வகுப்பு மாணவி ஓருவர், கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார்.

அதன்பிறகு அவர் மாலை யில் வீடு திரும்பவில்லை.மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லட்ச பிரபு (வயது 22) என்ப வருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மாணவியையும், அவருடன் இருந்த வாலிபரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசா ரணையில் மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் லட்சபிரபுவுடன் பழகி இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்ச பிரபுவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News