உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

ஆரல்வாய்மொழி பகுதியில் விபத்துகளை தடுக்க டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும்

Published On 2023-02-01 07:29 GMT   |   Update On 2023-02-01 07:29 GMT
  • விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் மீதும் நடவடிக்கை தேவை
  • வெள்ளமடம் டோல்கேட் 4 வழி சாலை அருகேயும் அதிக அளவு விபத்துகள் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்து மற்றும் உயிர் பலி ஆரல்வாய்மொழி சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்துகளுக்கு டாஸ்மாக் கடை மற்றும் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்கள் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர், கடையை சுற்றி உள்ள பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்குகின்றன. மேலும் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிர் பலியும் தொடர்கிறது. குறுகிய ரோட்டில் வழி பாதை சரியாக இல்லாததால் கார்கள் தாறுமாறாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வா கம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு ரோட்டோரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமல்லாது போக்கு வரத்து போலீசார் அல்லது உள்ளூர் போலீசார் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் போக்குவர த்துக்கு இடையூறாக உள்ள ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை முதல் பேரூராட்சி அலுவலகம் வரை தேவையில்லாமல் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து விபத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ள மடம் டோல்கேட் 4 வழி சாலை அருகேயும் அதிக அளவு விபத்து கள் நடந்து வருகிறது. குறிப்பாக வெள்ள மடம்-குலகேசரன்புதூர் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே விபத்துகள் நடந்து வருவதால் அங்கு வேகத்தை குறைக்க வேகத்தடையும் பேரிக்காடும் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News