உள்ளூர் செய்திகள்

கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

நாகர்கோவிலில் வாடகை பாக்கி கட்டாத கடைகளுக்கு சீல் வைப்பு

Published On 2023-01-31 10:26 GMT   |   Update On 2023-01-31 10:26 GMT
  • 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
  • கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச் ரோடு அருகே சரலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 17 கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை சரிவர கட்டாமல் இருந்தனர். ரூ. 8 லட்சத்து 47 ஆயிரத்து 86 வாடகை பாக்கி இருந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் உத்தரவிட்டார்.

நிர்வாக அதிகாரி ராமமோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பையா, ஞானப்பா, ஆல்ரின், சேகர், இளநிலை உதவியாளர் சாகுல் உள்பட அதிகாரிகள் இன்று காலை சரலூர் மீன் சந்தைக்கு சென்றனர். அப்போது வாடகை பாக்கி கட்டாத கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி கட்டாத கடைகள் சீல் வைக்கப்பட்டது. 17 கடை களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடைகள் சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் சிலர் வாடகை பாக்கியை கட்டுவதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற னர். வாடகைப் பாக்கி கட்டியதற்கான நகல் வாங்கியதும் சீல்கள் அகற்றப்பட்டு வியாபாரிகளிடம் மீண்டும் கடை திறந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News