உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடையை படத்தில் காணலாம்.

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை

Published On 2023-01-30 09:34 GMT   |   Update On 2023-01-30 09:34 GMT
  • இரணியல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே காற்றாடிமூடு என்ற இடத்தில் இருந்து ஆழ்வார் கோவில் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடையில் காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்க பட்டு திறந்து கிடப்பதாக கடை மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் வந்தது.

இதனை அடுத்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் இரும்பு சட்டம் உடைக்க பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்து மது பாட்டில்கள் பெட்டிகள் கடையில் வெளியே எடுத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மைக்கேல் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

முழுமையாக சோதனை செய்த பிறகு தான் எத்தனை மது பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுவரை துளைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News