உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குலசேகரத்தில் மது போதை தகராறில் தொழிலாளி கொலை

Published On 2022-12-28 12:53 IST   |   Update On 2022-12-28 12:53:00 IST
  • குலசேகரம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை
  • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

குலசேகரம் மணியங்குழி அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 63), தொழிலாளி. இவரது மனைவி சுசிலா. தேவதாஸ் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் 26-ந்தேதி மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி சுசிலா வீட்டிற்கு வந்த போது தேவதாஸ் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றார். அப்போது தேவதாஸ் தன்னை சிலர் தாக்கியதாக மனைவியிடம் கூறினார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சையில் இருந்த தேவதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற் றப்பட்டுள்ளது. சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு உள்ளனர்.தேவ தாசை தாக்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேவதாஸ் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்துள்ளது.

மதுபோதையில் ஏற் பட்ட தகராறில் அவரை தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News