உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடுகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் செல்போன் எண் வெளியிடப்பட்டபோது எடுத்த படம் 

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் போதைப் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

Published On 2023-02-01 07:11 GMT   |   Update On 2023-02-01 07:11 GMT
  • விழிப்புணர்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு அறிவுரை
  • போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, மாண வர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி,கல்லூரி விடுதி களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது.

கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உதவி இயக்குநர் மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு போதைபொருள்கள் வெளி இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசுத் துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீரா சாமி, கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News