உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலுக்கு வந்த வைகோவிற்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்த போது எடுத்த படம் 

தமிழ்நாடு குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டும்

Published On 2023-01-07 08:24 GMT   |   Update On 2023-01-07 08:24 GMT
  • சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.
  • ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேட்டி

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நாகர்கோவில் வந்தார். ஒழுகினசேரி 4 வழிச்சாலையில் வைகோவிற்கு குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தேவராஜ், பொருளாளர் பிச்சைமணி, மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி செல்வின், ஆபத்து உதவியாளர் அணி மாநில இணை செயலாளர் சுமேஷ், ஒன்றிய செயலாளர் நீலகண்டன், மாணவரணி அமைப்பாளர் சோனிராஜு, தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வின், மர்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.

அப்படி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றுகிற விதத்தில் தமிழகம் என்று அழைக்கலாம் என்று எங்கோ இருந்து வந்து அகந்தையின் உச்சக்கட்டத்தில் இந்த மாநிலத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றலாம் என்ற யோசனையைச் சொல்வதற்கு இவர் யார்? தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமிர்வாதம் பேசுகின்ற இந்த கவர்னர் அகற்றப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும். சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தவறாகக் சொல்லிவிட்டேன் என்று அவர் செல்ல வேண்டும். நான் கவர்னருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னரை பின்னால் இருந்து இயக்குவது சங்பரிவார் சக்திகள், இந்துத்வா சக்திகள் மதவாத சக்திகளுக்கு அந்த அளவு தைரியம் இல்லை. இவரை ஊதுகுழலாக வைத்துக் கொண்டு இந்த கருத்தைக் சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News