உள்ளூர் செய்திகள்

அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா நடந்தபோது எடுத்த படம் 

சாமிதோப்பு அன்புவனத்தில் அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா

Published On 2022-12-14 12:50 IST   |   Update On 2022-12-14 12:50:00 IST
  • திருஏட்டினை முத்திரி கிணறு வலம்வந்து அனைவருக்கும் முத்திரிபதம் போதிக்கப்பட்டது
  • திருஏடு வாசிப்பு மற்றும் தர்மங்கள் நடந்தது.

கன்னியாகுமரி:

அய்யா வைகுண்ட சாமியின் அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் 27-ந் தேதி அன்பு வனத்தில் நடைபெறும். விழாவன்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும்,அகிலத்திரட்டுஅம்மானை அலங்க ரிக்கப்பட்டு ஊஞ்சல் சேவை யும், திருஏட்டினை முத்திரி கிணறு வலம்வந்து அனை வருக்கும் முத்திரிபதம் போதிக் கப்பட்டது, திருஏடு வாசிப்பு மற்றும் தர்மங்கள் நடந்தது.

விழாவுக்கு அய்யாவழி தலைமை பதி தலைமை குரு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார், பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகி த்தார். சிறப்பு விருந்தினராக ரிமோன் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முகிலன் குடியிருப்பு ஊர் தலைவர் ஆர். எஸ். பார்த்தசாரதி, தி.மு.க. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, சேனா பள்ளி கோபால கிருஷ்ணன், மும்பை அய்யாவு, மகாராஜன் ஆசாரி, மணி, அறிவழகன், மனோன்மணி, ராஜாத்தி அம்மாள், சந்திரா, மகேஸ்வ ரி, மஞ்சுளா மற்றும் அன்பு க்கொடி மக்கள் அனைவரும் கலந்துகொண்டு உதய தின விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News