உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

என்ஜீனியர் வீட்டில் திருட்டு

Published On 2023-01-11 12:58 IST   |   Update On 2023-01-11 12:58:00 IST
  • 4 கைரேகைகள் சிக்கியது
  • பழைய கொள்ளையர்கள் கைவரிசையா?

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி ரேச்சல் தெருவை சேர்ந்த வர் அஸ்வின் (வயது 29), சாப்ட்வேர் என்ஜினியர்.

இவர் கடந்த 8-ந்தேதி தனது தாயாருடன் சென்னை சென்றார். பின்னர் நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஸ்வின் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த 6பவுன் நகை,ரூ.42,000 பணம் திருடப்பட்டு இருந் தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 4 கைரேகைகள் சிக்கி உள்ளது. அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.அஸ்வின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.

நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ ேராட்டில் செல்போன் கடை நடத்திய வருபவர் நிஷார். இவரது கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து செல்போன்கள் லேப்டாப் ரூ.6,200 ரொக்க பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்தும் வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கும் கைரே கைகள் சிக்கி உள்ளது. நாகர்கோவில் நகரில் அடுத்தடுத்து நடந்த 2 கொள்ளை சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

கொள்ளை சம்ப வங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News