உள்ளூர் செய்திகள்

கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

காஞ்சியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-18 09:03 GMT   |   Update On 2022-06-18 09:03 GMT
  • விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
  • புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஸ்ரீபூர்ணாம்பிகா, ஸ்ரீபுஷ்களாம்பிகா சமேத காஞ்சியப்பர் சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 13-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும் மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் தகட்டூர்ஞானசேகர சிவம், சபரிநாத சிவாச்சாரரியார்கள் தலைமையிலான குழுவினர் பூஜீக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி, அம்பாள், முருகன், சப்தகன்னியர் உப்பட பரிவார சன்னதி கோயில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும் மகா அபிஷேகமும் நடந்தது.

பூஜை மற்றும் விழாக்களில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா, கோவில் திருப்பணி குருவினர்கள் மேரிகாந்த், அன்பழகன், சிவஞானம், செந்தில்குமார், திராவிடமணி உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம வாசிகளும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர். இரவு புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குழுவினாரின் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News