உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கனகதாசர் ஜெயந்தி விழா

Published On 2022-11-14 15:16 IST   |   Update On 2022-11-14 15:16:00 IST
  • குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.
  • கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஓசூர்,

15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பக்தர் கவி கனகதாசர். இவர் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கன்னட பக்தி இலக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். இவர், குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.

ஓசூரில், குரும்பர் சமூக மக்கள் சார்பில் கவி கனகதாசரின் 535- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா தலைமையில், ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள பண்ட ஆஞ்சநேயா சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100- க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர்ஓசூர் தாசர பேட்டையில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட குரும்பர் சமூக தலை வர்திம்மராஜ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் கலந்து கொண்டு கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அரசு வக்கீல் சின்னபிள்ளப்பா, குரும்பர் சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் விழாவில் பேசினார்கள். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனேரிப்பள்ளி கோபம்மா சக்கர்லப்பா, பி.எஸ். திம்மசந்திரம் முனிகிருஷ்ணப்பா,தொழிலதிபர்சத்யமூர்த்தி, மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News