கோரிக்கை மனுவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அளித்தார்.
கள்ளபெரம்பூர் ஏரியை மேம்படுத்தி 2662 ஏக்கர் நிலங்களின் பாசன வசதியை உறுதி செய்ய வேண்டும்-கலெக்டரிடம் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மனு
- செங்கிப்பட்டி, டி.பி.சானிடோரியம் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையை புதிய பல்நோக்கு மருத்துவமனையாக அமைத்து தர வேண்டும்.
- தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் வலது கரையில் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை (26 கி.மீ முதல் 107.60 கி.மீ வரை) கரையை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட 10 கோரிக்கை மனுக்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பூதலூர், தஞ்சாவூர் வட்டங்களில் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மைல் 71/0 முதல் 83/5 வரை 63 ஏரிகள் மூலம் 4295 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறுவதை உறுதி செய்து மேம்பாட செய்து தர வேண்டும்.
பூதலூர் வட்டம், தோகூர் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான உலக பாரம்பரிய சின்னமான கல்லணை அருகே காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் திருச்சி நகர வெள்ள நீர் வடிகாலில் புதிய ஒருங்கிணைந்த உயர் மட்ட சுற்றுப்பாலம் அமைக்க வேண்டும்.
பூதலூர் வட்டம் நீர்வளத்துறை உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் 16 ஏரிகள் மூலம் 2440 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறுவதை உறுதி செய்து மேம்பாடு செய்து தர வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி பகுதி 14 கிராமங்களில் நீர்வளத்துறையின் 14 ஏரிகளின் மூலம் 1958 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி இல்லாத வானம் பார்த்த பூமியை புதிய பாசன வசதி திட்டம் ஏற்படுத்த வேண்டுகிறேன்.
கள்ளபெரம்பூர் நீர்வளத்துறையின் கள்ளபெரம்பூர் ஏரியை மேம்படுத்தி 2662 ஏக்கர் நிலங்களின் பாசன வசதியை உறுதி செய்து தர வேண்டுகிறேன்.
செங்கிப்பட்டி, டி.பி.சானிடோரியம் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையை புதிய பல்நோக்கு மருத்துவமனையாக அமைத்து தர வேண்டும்.
திருவையாறு வட்டம், தென்பெரம்பூர் கிராமம் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு வி.வி.ஆர் அணைக்கட்டிற்கு மேல்புறம் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளியக்ரஹாரம்- வெண்ணாறு- வெட்டாரு- தலைப்பு- அம்மன்பேட்டை - தென்பெரம்பூர்- விண்ணமங்கலம் வரையிலான ஆற்றுக்கரை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து தர வேண்டும்.
திருக்காட்டுப்பள்ளி -வளப்பக்குடி- மேலஉத்தமநல்லூர் -ஒத்தைவீடு காவேரி ஆற்றுக்கரை ஒரு வழி குறுகலான சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் வலது கரையில் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை (26 கி.மீ முதல் 107.60 கி.மீ வரை) கரையை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.