உள்ளூர் செய்திகள்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற காட்சி.

காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

Published On 2023-05-13 09:01 GMT   |   Update On 2023-05-13 09:01 GMT
  • காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
  • தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், அதகப்பாடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது, 3-ம் தேதி சாமி ஜம்பு நிகழ்ச்சியும், 4-ம் தேதி தீமிதித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து கரக வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் செல்லியம்மன் பட்டாளம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9-ம் தேதி விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 10-ம் தேதி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சி மங்கள வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் அதகப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று பந்தகாசி நிகழ்ச்சியோடு கோவில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.

Tags:    

Similar News