உள்ளூர் செய்திகள்

கலாஷேத்ரா சர்ச்சை- 4 பேர் மீது மாணவிகள் புகார்

Published On 2023-03-31 09:38 GMT   |   Update On 2023-03-31 09:38 GMT
  • கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
  • 12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன்.

சென்னை:

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி இன்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

கலாஷேத்ரா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளோம். ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன். சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். 4 பேரின் மேல் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

போராட்டங்களை நிறுத்திவிட்டு விடுதிக்கு சென்று படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

வரும் திங்கட்கிழமை விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News