உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-02 09:00 GMT   |   Update On 2022-09-02 09:00 GMT
  • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும்.
  • நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு:

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும். மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திடவும், கலப்படமான உரங்களை கண்டுபிடித்து தடை செய்யவும், நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், துணைச் செயலாளர்கள் லெனின்முருகானந்தம் பாலன், பொருளாளர் அயூப்கான் நகர செயலாளர் முத்துவேல், இளைஞர் அமைப்புச் செயலாளர் திருமணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், கோஷிமின் ஜவகர், ஸ்ரீதரன், கருணாகரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News