சிறப்பு மருத்துவ முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
விளாத்திகுளம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமையி லான மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோ தனை ஆகியவை நடத்தப்பட்டு, மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், பச்சைமலை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதூர் ஊராட்சி ஒன்றியம், மாதலபுரம் கிராமத்தில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளையும், வாதலக்கரை கிராமத்தில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலக் கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, அருமைநாயகம் ஆகியோர் குடும்பங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறி, 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.