உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

மீனவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-09-13 09:02 GMT   |   Update On 2023-09-13 09:02 GMT
  • தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
  • கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

உடன்குடி:

தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தலைவர் பெர்னார்டு, துணைத் தலை வர்கள் சங்கர் எம்.எல்.ஏ., மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர்கள் தம்பிதுரை, பொன்னரசு, ஜெயபிரகாஷ், புளோரன்ஸ், ரவிச்சந்திர ராமவன்னி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிஷங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராமநாத புரத்தில் நடந்தமீனவர்நல மாநாட்டில் தமிழக மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது, விசைப்படகுகளுக்கான மானியவிலை டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கி உத்தரவு பிறப்பித்தது, மீனவர்கள் நலத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 5,034 வீடுகளுக்கு பட்டா வழங்க உத்தரவு, 45 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்க உத்தரவு,

தூத்துக்குடி, கன்னி யாகுமரி, நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் களுக்கு மண்எண்ணைய் 3,400 லிட்ட ரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தியது,

தங்கச்சிமடத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு, பாம்பன் பகுதியில் உள்ள மீன் பிடி படகுகளை நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைப்பதற்கும், ஆய்வு மேற்கொள்ள மற்றும் குத்துக்கால் மீன்பிடித்து றைமுகத்தில் படகுகளை நிறுத்த தூண்டில் வளைவு பாலம் அமைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவு,

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் அமைக்க ப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்,

மீனவர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி உத்திரவு,

நாட்டுப்படகு மீனவர்க ளுக்கு மானிய விலையில் ரூ. ஆயிரம் வெளி பொறுத்தும் எந்திரம் வழங்கிட உத்திரவு என 10 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க., மீனவர் அணி மற்றும் ஒட்டு மொத்த மீனவ சமுதாயம் சார்பில் பாராட்டு தெரிவிப்பது, கலைஞர் தூற்றாண்டு விழா மீனவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களில் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Tags:    

Similar News