உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கிய காட்சி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக கபடி போட்டி

Published On 2023-03-22 08:11 GMT   |   Update On 2023-03-22 08:11 GMT
  • போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன.
  • முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார்.

செய்துங்கநல்லூர்:

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக வல்லநாடு அருகே உள்ள கீழச்செக்காரக்குடி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.

போட்டிக்கு ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை டிராகன் வாரியர் பி அணியும், 2-ம் பரிசை புதியம்புத்தூர் முருகன் நினைவு கபடி அணியும், 3-ம் பரிசை டிராகன் வாரியர் சி அணியும், 4-ம் பரிசை அகிலம்புரம் இளைஞர் கபடி அணியும் பெற்றது.

முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார். இரண்டாம் பரிசு 8,000 மற்றும் கோப்பையை கருங்குளம் ஒன்றிய துணை சேர்மன் லட்சுமண பெருமாள் வழங்கினார். கபடி போட்டியில் விளையாடிய அணிகளுக்கு ஆடைகளை பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பையாவும், விளையாட்டு உபகரணங்களை வடக்கு காரசேரி மாடசாமியும் அன்பளிப்பாக வழங்கினார்.

Tags:    

Similar News