உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்- பணி நியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

Update: 2022-06-25 10:53 GMT
  • பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்தினர்.
  • இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது. முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

இம்முகாமில் 11 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்தினர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர். இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணாகிரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News