உள்ளூர் செய்திகள்

வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம்

Published On 2023-01-21 14:58 IST   |   Update On 2023-01-21 14:58:00 IST
  • நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
  • 165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

நெல்லை:

நெல்லை ஏ.கே.ஓய். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி தலைவர் ஏ.கே.ஓய். செய்யது அப்துல் காதர் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற வளாகத்தேர்வுக்கு கல்லூரி இயக்குனர் எஸ். செய்யது முஹம்மது தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் எம். செய்யது முஹம்மது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் அயூப் வரவேற்று பேசினார்.

இதில் சென்னை பி.எஸ்.ஏ. நிறுவனத்தை சேர்ந்த மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் ரஞ்சித், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வளாகத்தேர்வினை நடத்தினர்.

165 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வளாகத்தேர்வில் 77 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றனர்.

தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் எஸ். முஹம்மது மதார் கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News