உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
- ரோஷினி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
- மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சுந்தர வேல்புரம் 1-வது தெருவை சேர்ந்தவர் எடிசன். இவரது மகள் ரோஷினி ( வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். எனினும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக ரோஷினி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருக பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.