கொள்ளை நடந்த பார்த்தசாரதி வீடு.
பண்ருட்டி அருக வீடுகளில் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
- கரும்பூர் கிராமத்தைசேர்ந்தவர் பார்த்தசாரத(37).,நேற்று இரவு தூங்கி க்கொண்டிருந்த போதுவீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள்நுழைந்த மர்மஆசாமிகள்பீரோவில் இருந்த 6 1/2பவுன்நகைகளை கொள்ளையடித்து சென்றனர். .
- இதே போல பக்கத்தில் இருந்த ராமதாஸ் (60)வீட்டுக்குள் நுழைந்துபீரோவில் இருந்த பட்டு புடவைகள் திருடி சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தைசேர்ந்தவர் பார்த்தசாரதி (37). இவர் புதுவையில் உள்ள தனியார்நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்றுஇரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போதுவீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள்நுழைந்த மர்மஆசாமிகள்பீரோவில் இருந்த 6 1/2பவுன்நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதே போல பக்கத்தில் இருந்த ராமதாஸ் (60)வீட்டுக்குள் நுழைந்துபீரோவில் இருந்த பட்டு புடவைகள் திருடி சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள்,தடய ய அறிவியல் நிபுணர்கள் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.போலீஸ் மோப்பநாய்சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது யாரையும் கல்வி பிடிக்கவில்லை.