உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட செல்லதுரை.

அம்மன் கோவிலில் நகை திருட்டு- வாலிபர் கைது

Published On 2022-08-17 09:20 GMT   |   Update On 2022-08-17 09:20 GMT
  • தங்க பொட்டு தாலியை அறுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடியுள்ளார்.
  • அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி செல்வதர்க்குள் அவர் தப்பி சென்று விட்டார்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் - திருச்சி சாலையில் ஆலமரம் அருகே உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரகாரத்தின் வெளியே பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர் தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த. தங்க பொட்டு தாலியை அறுத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடி உள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் தனிப்படை அமைக்க ப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் வல்லம் ஏகவுரியம்மன் கோவில் அருகே அம்மன் தாலியை பறித்து சென்ற கரூரை சேர்ந்த செல்லதுரை (வயது 28) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News