உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

குமாரபாளையத்தில் ஜேக்டோ-ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-25 15:51 IST   |   Update On 2023-03-25 15:51:00 IST
  • அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
  • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தி கண்டன கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், சரவணன், செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News