உள்ளூர் செய்திகள்

பெண்னுக்கு விதவை சான்றிதழை கோட்டாட்சியர் (பொ) மதியழகன் வழங்கினார்.

விதவை சான்று கோரி விண்ணப்பித்த பெண்னுக்கு சான்றிதழ் வழங்கல்

Published On 2023-06-09 15:09 IST   |   Update On 2023-06-09 15:10:00 IST
  • வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ஆதனூர், கருப்பம்புலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புஷ்பவனம், தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, குரவப்புலம், ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இதில் ஆதரவற்ற விதவை சான்று கோரி விண்ணப்பித்திருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ரேகா தேவி என்பவருக்கு உடனடியாக ஆதரவற்ற விதவை சான்றை கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் வழங்கினார்.

அப்போது தாசில்தார் ஜெயசீலன், வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவியரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News