உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய அளவிலான குத்துசண்டைபோட்டி வீரர், வீராங்கனைகள் அறிமுகம்-வழியனுப்பும் விழா

Published On 2022-10-28 14:53 IST   |   Update On 2022-10-28 14:55:00 IST
  • நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர்.
  • வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

குன்னூர்,

தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நீலகிரி குத்துசண்டை சங்கத்தின் சார்பில் குன்னூர் ஒய்எம்சிஏ அரங்கில் நடந்தது.

விழாவில் குன்னூர் செயலாளர் பிரேம் ஆனந்த், குன்னூர் சப்-இன்ஸ ்பெக்டர் ஆனந் தராஜ், நீலகிரி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் செயலாளர் இமாம் தீன், குத்து சண்டை பயிற் சியாளர் அப்பாஸ் மற்றும் பெற் றோர்கள் வீர வீராங் கனைகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News