உள்ளூர் செய்திகள்
தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
- சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தினர்.
- நேர்காணலில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
சேலத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
மேலும் நேர்காணலில் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.