உள்ளூர் செய்திகள்

பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

சர்வதேச யோகா தினம்

Published On 2023-06-23 15:20 IST   |   Update On 2023-06-23 15:20:00 IST
  • வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது.
  • அவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் தில்லை நகர் செயின்ட் மேரிஸ் நர்சரி பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி ஆகியோர் தலைமை தாங்கினர். லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டி சார்பாக ஜெசி அரிமா தூதர் டாக்டர்.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏகம் அறக்கட்டளை இன்பதுரை , தஞ்சை நகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளை குழுவினர் ஆகியோர் இணைந்து யோகா பயிற்சியை வழங்கினர்.

அப்பொழுது யோகா கற்று கொண்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது .

வியர்த்து கொட்டுதல், மனநிலையில் திடீர் மாற்றம், கோபம், எரிச்சல், உடல் சூடாகுதல் போன்ற பிரச்னைகளை தடுப்பதற்கும் சரிசெய்வ தற்கும் யோகா நல்லது .

ரத்த ஓட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எடுத்துக் கூறி ஒவ்வொரு ஆசனங்க ளையும் செய்து காட்டி மாணவர்கள் பின்பற்ற யோகா பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

முன்னதாக நிகழ்ச்சியில் சோழ மண்டல நாயகன் ஜெசி.அரிமா தூதர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட்ராஜ் யோகா பயிற்சி செய்யும் மாணவ- மாணவிகளுக்கு துண்டு, பேனா வழங்கினார்.

அவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News