உள்ளூர் செய்திகள்
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அரசு பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாட்டம்
- பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
- பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொக்கலாடி ஊராட்சி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அருள் முன்னிலை வகித்தார். நீர்நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
இதில் மாணவர்கள் வனங்களை காப்பது குறித்து பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.