உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி

Published On 2023-09-27 09:46 GMT   |   Update On 2023-09-27 09:46 GMT
  • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் -பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
  • போட்டியில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார்.

ஷிபா மருத்துவமனை மருத்துவர் ஜவகர் சலீம், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிரேமா வரவேற்று பேசினார். பேராசிரியர் பால் மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய கபடி அணி தலைவர் மணத்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். குரு சித்திர சண்முக பாரதி போட்டி யினை ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சரவணன், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி, நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான், அறங்காவலர் குழு உறுப்பினர் இடைகால் குமார், இளைஞரணி முருகானந்தம், வார்டு செயலாளர் சையது மசூது, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முன்னாள் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுலைமான் மற்றும் பேராசிரியர்கள் கிருத்திகா, சண்முகப்பிரியா, சண்முக வடிவு, முருகன், மரகத கோமதி, ஆறுமுகம், சாம்சங் லாரன்ஸ்பால், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

Tags:    

Similar News