உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி தேரில் குதிரை பொம்மைகள் பொருத்தும் பணி நடைபெற்ற காட்சி.

நெல்லையப்பர் கோவில் தேர்களில் கம்புகள் பொருத்தும் பணி தீவிரம்

Published On 2022-07-04 09:54 GMT   |   Update On 2022-07-04 09:54 GMT
  • இன்று காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார்.
  • 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நெல்லை:

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

உள்ளூர் விடுமுறை

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்தாண்டு தேரோட்டத்தை வெகு விமர்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தேரோட்ட பாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.

திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு பக்தி சொற்பொழிவு, சுமார் 5 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு பரதநாட்டியம், 8 மணிக்கு பொம்மலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கிடையே தேரோட்டத்திற்காக நெல்லையப்பர் தேர் (பெரிய தேர்), காந்திமதி தேர் உள்ளிட்ட அனைத்து தேர்களிலும் கம்புகள் மற்றும் குதிரை பொம்மைகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News