உள்ளூர் செய்திகள்

டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கொசு மருந்து அடிக்கப்பட்ட காட்சி.

நெல்லை மாநகர பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Published On 2023-09-13 14:59 IST   |   Update On 2023-09-13 14:59:00 IST
  • நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
  • வாறுகால்களில் தேங்கி கிடக்கும் சாக்கடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தியிடம் புகார் அளித்து வந்தனர்.

4 மண்டலம்

இதையடுத்து மாநகர பகுதியில் அவரது உத்தரவின் பேரில் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் 4 மண்டலங்களிலும் குறுகிய தெருக்களில் சாக்கடை வாறுகால் உள்ள பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாறுகால்களில் தேங்கி கிடக்கும் சாக்கடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பன்றி காய்ச்சல் உள்ளிட்டவை பரவாமல் இருப்பதற்காக சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே எந்த விதமான நோய் தொற்றும் பரவாமல் இருக்கும் வண்ணம் மாநகரில் தூய்மை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூய்மை பணி

நெல்லை டவுன் மண்டலத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வாறுகால்களில் அடைப்பு ஏற்படாத வண்ணம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இன்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரை யின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நெல்லை டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்த பணியின்போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மக்களிடையே நோய் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News