உள்ளூர் செய்திகள்

மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

Published On 2023-11-25 08:06 GMT   |   Update On 2023-11-25 08:06 GMT
  • இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
  • வீரநாயக்கன் தட்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பி.எம்.சி. பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு மற்றும் இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பணி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது. இதே போல பி.எம்.சி பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், பாரதி நகர், ஹவுசிங் போர்டு, ஆர்.கே.கார்டன், பால்பாண்டி நகர், சின்னமணி நகர், மற்று சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் இரவு, பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் மேயர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து வீரநாயக்கன் தட்டில் ஸ்மார்ட் வகுப்பறை யுடன் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப் பள்ளி பணிகள் நிறை வடைந்ததால் மாண வர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

அதனையும் கட்டபொம்மன் நகர், அத்திமரபட்டி, ஜெ.எஸ் நகர், ராஜூ நகர், சாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும் சாந்தி நகர், சக்தி நகர்,ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்ததையும் லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், மற்றும் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தி.முக. பகுதி செயலாளரும், மண்டல தலைவர்களுமான சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பச்சிராஜன், சரவணக்குமார், முத்துவேல், பொன்னப்பன்,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News