உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


ஆலங்குளம் அருகே அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்

Published On 2023-01-24 14:30 IST   |   Update On 2023-01-24 14:30:00 IST
  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.
  • முகாமில்அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.

உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம், விதை ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் பேசினர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டாரத்தில் தங்கி வேளாண் குறித்து அறிய வந்திருக்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் லக்ஸயாஸ்ரீ, கவிதா ஆகியோர் வெர்டிசிலியம் லெக்கானி பயன்பாடு குறித்து விவரித்தனர்.

முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News