உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து மாத விழா

Published On 2023-09-24 16:13 IST   |   Update On 2023-09-24 16:13:00 IST
  • பாப்பாரப்பட்டி அருகே குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.
  • 15 அங்கன்வாடி மையத்தினர் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே வேலம்பட்டி அங்கன்வாடி மையத்தில் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

இதில் பென்னாகரம் வட்டாரத்தில் 177 அங்கன்வாடி மையங்களில் இருந்து பாப்பாரப்பட்டி பகுதியில் 15 அங்கன்வாடி மையத்தினர் வேலம்பட்டி ஊட்டச்சத்து மையத்தில் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறு தானிய பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினால் வண்ணக் கோலமிட்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச் சத்துகள் குறித்து எடுத்து ரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின்

சமூக நலத்துறை மேற் பார்வையாளர்கள் விஜயலட்சுமி, சுமதி, ஒருங்கி ணைப்பாளர் அன்பரசன், பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியா ளர்கள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Similar News