உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் நகராட்சி கமிஷனர் ஆய்வு
- பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.
- நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.
இதனை நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவரை சந்தித்து அப்பகுதியில் இருக்கும் குறைகளை கூறினார்கள்.