உள்ளூர் செய்திகள்

மூழ்கிய நெற்பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.

திருமருகல் ஒன்றியத்தில் தொடர் மழை; 50 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

Published On 2022-11-14 09:46 GMT   |   Update On 2022-11-14 09:46 GMT
  • நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்து உள்ளனர்.
  • வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம், அம்பல், போலகம், வாழ்குடி உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சியத்த மங்கை கோவில் சியாத மங்கை தென்படாகை வருவாய் கிராமம் பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அழுகி துர்நாற்றம் விசுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி செய்துள்ளோம் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசியது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags:    

Similar News