உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் தக்காளி இஞ்சி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தொடர் மழை எதிரொலி: கடலூரில் தக்காளி, இஞ்சி விலை மீண்டும் உயர்ந்தது

Published On 2023-07-25 09:14 GMT   |   Update On 2023-07-25 09:14 GMT
  • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
  • பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடலூர்:

இந்தியா முழுவதும் தொடர் கனமழை காரண மாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் நகை பணம் கொள்ளை அடிப்பது போல் தற்போது விலை ஏற்றம் காரணமாக தக்காளியையும் கொள்ளை அடித்து விற்பனை செய்த சம்பவமும், அதன் மூலம் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடை யின் மூலமாக 90 ரூபாய்க்கும் , அதன் பிறகு 60 ரூபாய்க்கும் தக்காளியை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 300 ரூபா ய்க்கும், சின்ன வெங்காயம் 160- க்கும் விலை உயர்ந்து விற்பனையாகி வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை ரூ.75 முதல் ரூ.85-க்கும், இஞ்சியின் விலை ரூ.220-க்கும் விலை குறைந்து விற்பனையாகி வந்தன.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநி லங்களில் தொடர் மழை இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் தக்கா ளியின் விலை கடலூரில் 95 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 235 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிலோ ஒன்றுக்கு தக்காளியின் விலை 20 ரூபாயும், இஞ்சி யின் விலை 15 ரூபாயும் மீண்டும் விலை உயர்ந்த காரணத்தினால் பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எவ்வ ளவு உயர்ந்து, எவ்வளவு குறைந்து உள்ளது என்ப தனை கண்காணிக்கும் வகையில் மக்களின் மன நிலை மாறிய நிலையில் தற்போது அத்தி யாவசிய பொருட்களான அன்றாட பயன்படுத்தக் கூடிய தக்காளி, இஞ்சி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலை களை பொதுமக்கள் தினந்தோறும் கண்காணித்து அதன் அடிப்படையில் கிலோ கணக்கில் வாங்காமல் தேவைக்கு மிக குறைந்த அளவில் வாங்கி செல்வதை யும் காணமுடிகிறது.

மேலும் சாதாரண தொழி லாளர்கள் வீடுகளில் இது போன்ற காய்கறிகள் பயன் படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து காய்கறி கடை களில் வழக்கமான கூட்டம் இல்லாமல் குறைந்த அளவி லான பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கை கணக்கில் வாங்குவது காண முடிந்தது. மேலும் தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News