உள்ளூர் செய்திகள்

சாலையின் நடுவே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள்.

ஏற்காட்டில் இடை விடாத மழை மின்கம்பங்கள், மரங்கள் ரோட்டில் சாய்ந்தன

Published On 2022-12-11 08:53 GMT   |   Update On 2022-12-11 08:53 GMT
  • மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் நாள் இரவு பகல் பலத்த மழை பெய்தது.
  • தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் லேசான சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசிவருகிறது.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் நாள் இரவு பகல் பலத்த மழை பெய்தது அதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் லேசான சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசிவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே மரகிளைகள் விழுந்துக்கிடகின்றது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் வாட்டி வைக்கிறது.

பொதுவாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை படகு இல்ல சாலைகள் சுற்றூலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் படகு இல்லத்தில் படகுகள் நீரில் மூழ்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. குளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை மலை பாதையில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது மின்சார வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று காலை மலை பாதை 18-வது கெண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News