உள்ளூர் செய்திகள்

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

ஏற்காட்டில்நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின ஊர்வலம்

Published On 2023-05-02 12:58 IST   |   Update On 2023-05-02 12:58:00 IST
  • ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது.
  • 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

ஏற்காடு:

ஏற்காட்டில் ஐ.என்.டி.யு.சி இயக்கத்தின் இணைப்பு சங்கமான நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மே தின ஊர்வலம் நடை பெற்றது. இதில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பச்சை, வெள்ளை சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை மாநில செயலாளர் நல்லமுத்து தொடங்கி வைத்தார். இதில், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் நமது நாட்டில் நசுக்கப்படுகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்கள் திருத்தப்படு கின்றன. இந்த அநீதி முறியடிக்கப்பட வேண்டும். தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பு வேண்டும். போராடி பெற்ற 8 மணி நேரம் வேலை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியாக தனியார் தங்கும் விடுதி வரை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில மூத்த பொதுச் செயலாளர் நல்லமுத்து, மாநில செயலாளர் தேவராஜூ, மேக்னசைட் தலைவர்கள் சரவணன், மாதேஸ்வரன், மகாலிங்கம், தலேமா தேசிய தொழிலாளர் சங்கம் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அனைத்து தொழிலாளர்க ளுக்கும் மே தின நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News