உள்ளூர் செய்திகள்

உப்பள பகுதிகளில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வேதாரண்யத்தில், தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு

Published On 2023-05-06 10:00 GMT   |   Update On 2023-05-06 10:00 GMT
  • உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
  • ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் உப்பு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு புதிதாக தொழில் தொடங்குவது தொ டர்பாக சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பி.எஸ்.ஆர்.பாபு, ஜி.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினர் தென்னடார், கடிநெல்வயல், அகஸ்தியம்ப ள்ளி ஆகிய இடங்களில் உள்ள உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் பற்றி விளக்கி, ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வி ன்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், வக்கீல் தங்க.கதிரவன், வருவாய்த்து றையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News