நல திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி வழங்கினார்.
உரிகம் கிராமத்தில் 321 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள்
- 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
- துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா கடை கோடி மலை கிராமமான உரிகம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, இயற்கை மரண நிவாரணம், புதிய ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உட் பட 321 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 13 ஆயிரத்து 960 மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, அஞ்செட்டி வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுப்பிரியா, விமல் ரவிக்குமார், உரிகம் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்மா மகாதேவையா, கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னபசவம்மா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பூவிதன் நன்றி கூறினார்.