உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலை.

திருத்துறைப்பூண்டியில், தார்சாலை அமைத்து தர வலியுறுத்தல்

Published On 2023-02-04 13:42 IST   |   Update On 2023-02-04 13:42:00 IST
  • அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது.
  • பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

திருத்துறைப்பூண்டி:

மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-

திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் தங்கள் பணி நிமித்தமாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது. அதுவும், தற்போது பெய்து வரும் கனமழையால் சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியமாகவும் காட்சியளிக்கிறது.

இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சாலையை தார்சாலையாக அமைத்திடவும் மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் சிமெண்டு கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News