உள்ளூர் செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.
மோரமடுகு கிராமத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
- இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசின் புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.