உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசிய காட்சி. அருகில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.,  

வருகிற தேர்தலில் நெல்லை பாராளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்- இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-07-24 14:49 IST   |   Update On 2022-07-24 14:49:00 IST
  • நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம் .எல். ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அவ்வாறு அவர் வரும்போது பணகுடி பகுதியில் உள்ள காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலை மற்றும் மூப்பனார் சிலைகளை புதுப்பித்து திறக்க வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை பாராளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News