உள்ளூர் செய்திகள்

தார்பாய் போட்டு உப்பு மூடப்பட்டு உள்ள காட்சி.

மரக்காணத்தில் உப்பு உற்பத்தி இல்லாததால் வேலைஇன்றி தவிக்கும் தொழிலாளர்கள்

Published On 2022-08-05 09:18 GMT   |   Update On 2022-08-05 09:18 GMT
  • மரக்காணத்தில் உப்பு உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
  • மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி பணி நடைபெற்று வந்தது இந்த பணி கடந்த 6 மாதங்களாக நடந்தது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் 30 ஆயிரம் டன் உப்பு மலை போல் குவிக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு உள்ளது. உப்பு உற்பத்தியும் நடைபெறவில்லை. இதனால் 5000 தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

Tags:    

Similar News