உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

இருளப்பட்டி கோவில் தேரோட்டத்தில் தேர் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2022-08-18 09:48 GMT   |   Update On 2022-08-18 09:48 GMT
  • தேர் திருவிழாவுக்கு அரசு சிறப்பு நகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
  • தேரோட்டத்தில் திருத்தேர்மீது உப்பு, மிளகு, முத்து கொட்டைகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து, கோவில் கொடியேற்று விழா, பல்லக்கு உற்சவம், வாணவேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

இதனையடுத்து, காணியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் திருத்தேர்மீது உப்பு, மிளகு, முத்து கொட்டைகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

இந்த தேர் திருவிழானையொட்டி, அரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, அ.பள்ளிப்பட்டி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

மேலும் அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தேர் திருவிழாவுக்கு அரசு சிறப்பு நகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இருளப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஊர்த் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்த தேர்திருவிழாவில் பங்கேற்றனர்.

அரூர் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News