உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


நெல்லையில் நடைபெற்ற போட்டிகளில் சுரண்டை எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-01-24 08:24 GMT   |   Update On 2023-01-24 08:24 GMT
  • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
  • மாணவர்கள் நடனம், பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசினை பெற்றனர்.

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலை கலாச்சார மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியில் 74 பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியை சேர்ந்த ஒவ்வொரு மாணவர்களும் சிறப்பான முறையில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.

தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல்,கோலப்போட்டி ,தமிழ் பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசும்,தமிழ் கட்டுரைப் போட்டி, ஆங்கில கட்டுரைப்போட்டி, குழு பாடலில் 2-வது பரிசும் பெற்றுள்ளனர். பள்ளி முழு மைக்கான 2-வது பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

Tags:    

Similar News