பொம்மிடியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எந்த வித இடையூறும் இல்லை.
- பொம்மிடி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பேருந்து நிலைய நுழைவு வாயில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஒதுக்குப்புறமாக பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தின் டிரா ன்ஸ்பாரம் அமைந்துள்ளது.
இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எந்த வித இடையூறும் இல்லை.
இந்த நிலையில் இந்த ட்ரான்ஸ்பாரம் அமைந்துள்ள நிலத்தை ஒட்டிய தனி நபருக்கு ஆதரவாக பொம்மிடி மின் பகிர்மான கழகத்தினர் தனது ஊழியர்களுடன் வந்து டிரான்ஸ்பராத்தை இடம் மாற்றுவதாகவும், அருகில் உள்ள வாடகை கார் டிராவஸ் ஓட்டும் ஸ்டேண்டு அருகில் கம்பம், உதரி பாகங்களை கொண்டு வந்து இறக்கி நட முயற்ச்சித்தனர்.
இதற்கு 30-க்கு மேற்பட்ட வாடகை வாகன கார், ட்ராவல்ஸ் ஓட்டுனர்கள் வாகன நிறுத்தம் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொது மக்களுக்கும் எங்களுக்கும் இடையூறு தற்போது டிரான்ஸ்பா ரத்தால் எந்த இடையூறு யாருக்கும் இல்லை ஏன் இடமாற்றம் என கூறி எதிப்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு மின்வாரிய ஊழியர்கள் மேலிடத்து உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கூறி விட்டு சரி அருகில் ஏதாகிலும் இடத்தில் நடுகின்றன் என முயற்ச்சித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு சென்று வரக்கூடிய வழியில் இடையூறாகவும், 200 அடி தூரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதாலும் இப்பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைக்க எதிர்ப்பு கிழம்பியது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு பொம்மிடி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து மின் வாரியத்தினர் கலைந்து சென்றனர். தனிநபர் வருவாய் ஈட்டுவதற்காக பொதுமக்களுக்கு இடையூறாகவும், மிகவும் ஆபத்தான பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைத்தே தீருவோம் என மின்வாரியத்தின் அடாவடித்தனத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.