உள்ளூர் செய்திகள்

நூதன முறையில் பெண் ஒருவர் அருள்வாக்கு கூறி சாலை பாதுகாப்பு நாடகம் நடத்தினார்.

தஞ்சையில், நூதன சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நாடகம்

Published On 2023-01-30 09:59 GMT   |   Update On 2023-01-30 09:59 GMT
  • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.
  • செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே நேற்று தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நூதன விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பிள்ளையார்பட்டியை சேர்ந்த முன்னாள் அங்கன்வாடி ஆசிரியை ஜெயலட்சுமி, நாட்டுப்புற கலைகளை ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் சேகர் ஆகியோர் பொதுமக்களுக்கு நூதன முறையில் ஆத்தா வந்திருக்கேண்டா..,

ஹெல்மெட் போட்டு வண்டிய ஓட்றா.. என அருள்வாக்கு கூறி சாலை பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.

இதன் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்து ள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில்:-

"குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.

இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.

மேலும், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து போலீ சார் இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பா ர்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

Tags:    

Similar News